சென்னை

கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

DIN


சென்னை வளசரவாக்கம் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை தனியார் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் கழிவுநீர் கால்வாயில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஆண் குழந்தையை அதேப் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் மீட்டார். இந்தக் குழந்தைக்கு சின்னப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, குழந்தை நல்ல உடல் நிலையில் உள்ளது.
காப்பகத்தில் ஒப்படைப்பு: இதையடுத்து, அந்தக் குழந்தையை சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அந்தக் குழந்தையை சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜாவிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, அக்குழந்தை கலைச்செல்வி காருண்யா தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான காப்பத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் கூறுகையில், குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கி மூலம் நாள்தோறும் வழங்கப்படும். குழந்தையின் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 2,165 வழங்கப்படும் என்றனர். 
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT