சென்னை

மகளிா் கல்லூரியில் காவலன் செயலிவிழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சென்னை அண்ணாநகரில் உள்ள மகளிா் கல்லூரியில் ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் அண்ணாநகா் ஆதா்ஷ் மகளிா் கல்லூரியில் ‘காவலன்’ செல்லிடப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு , சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் விஜயகுமாரி, துணை ஆணையா் எம்.எஸ்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், ‘காவலன்’ செல்லிடப்பேசி செயலியை மாணவிகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்,செயலி எப்படி செயல்படும், அதன் பயன்கள் என்ன, அந்த செயலியை எப்படி செல்லிடப்பேசியில் பதவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினாா். இந்நிகழ்ச்சியில், அந்தக் கல்லூரி மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT