சென்னை

தேடித் தேடி...

DIN



மணிபாரதி:
வீட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களை நிறைய வாங்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள ஆக்டிவிட்டி புத்தகங்கள், 
டதஞயஉதஆந புத்தகங்கள், இந்தி - இங்கிலீஷ் - தமிழ் அகராதி, இந்திய வரைபடம், உலக வரைபடம் ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன். 
கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் வாங்கியிருக்கிறேன். 
டேல் கார்னகியின் கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?, நண்பர்களை எளிதாகப் பெறுவதும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி? ஆகிய புத்தகங்களையும் வாங்கினேன்.
ரியோ ஒகாவா எழுதிய நான் நன்றாகவே இருக்கிறேன் என்ற உணர்வு என்ற புத்தகத்தையும் வாங்கியிருக்கிறேன் என்றார்.

கார்த்திக் பாலாஜி: 
 இலக்கிய நூல்கள் நிறைய வாங்கியிருக்கிறேன். எழுத்தாளர் சதத் ஹசன் மண்ட்டோவின் எழுத்துகளின் தொகுப்பு நூலான மண்ட்டோ படைப்புகள் என்ற நூலை வாங்கியிருக்கிறேன். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த இனக் கலவரம் பற்றிச் சித்திரிக்கும் படைப்புகளை மண்ட்டோ படைத்திருக்கிறார். 
ஜெயமோகனின் அறம், சாகித்ய அகாதெமி வெளியிட்ட சமகால இந்தியச் சிறுகதைகள், ரவீந்திரநாத் தாகூரின் வினோதினி, சா.கந்தசாமியின் சிறுகதைகள், கந்தர்வனின் சிறுகதைகள் எல்லாம் வாங்கியிருக்கிறேன். தமிழகப் பண்பாடு, வரலாறு, ஆட்சிமுறை பற்றியெல்லாம் தெளிவான புத்தகங்களை எழுதும் தொ.பரமசிவனின் நூல்களையும் வாங்கியிருக்கிறேன். 
சுப.உதயகுமார் நேர்காணல்கள் புத்தகம், வங்க
மொழிச் சிறுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என இலக்கியம், வரலாறு சார்ந்த புத்தகங்களையே அதிகம் வாங்கியிருக்கிறேன். தேடி வந்த புத்தகங்கள் எல்லாம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT