இயந்திரக் கோளாறு: பிப். 5 வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது
இயந்திரக் கோளாறு காரணமாக வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட ஓட்டேரி மயான பூமியில் எரியூட்டு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது. இந்த நாள்களில் பொதுமக்கள் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.