சென்னை

ஏடிஎம் மையத்தில் ரூ.10 லட்சம் திருடிய வழக்கு: தலைமறைவாக இருந்த நைஜீரிய இளைஞர் கைது

DIN

சென்னை, மதுரவாயல் அருகே ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சத்தை திருடிய வழக்கில் தொடர்புடைய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்யப்பட்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
 மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 7 -ஆம் தேதி, தனியார் நிறுவன ஊழியர்கள் தேவராஜ், முரளி ஆகியோர் ரூ.10 லட்சத்தைக் கொண்டு வந்தபோது, அங்கு வந்த சிலர், இருவரையும் தாக்கிவிட்டு 10 லட்சத்தைத் திருடிச் சென்றனர்.
 இது குறித்து, மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நைஜீரியாவைச் சேர்ந்த இ.அக்யோ மயே, பா.அமூ ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நைஜீரியாவைச் சேர்ந்த பெரல் என்பவரை கர்நாடக மாநிலம், மைசூருவில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT