சென்னை

போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சி: இருவர் சிக்கினர்

சென்னையில் உள்ள கொரிய தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சித்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DIN


சென்னையில் உள்ள கொரிய தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சித்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தென் கொரிய தூதரகம் உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம், வேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (36), கடலூர் மாவட்டம் தொழுர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (26) ஆகிய இருவரும் விசாவுக்காக  விண்ணப்பித்தனர்.
இதற்கான ஆவணங்களை இருவரும் வியாழக்கிழமை அளித்தனர். அந்த ஆவணங்களை தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அவை போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் தூதரக அதிகாரிகள் பிடித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT