சென்னை

சென்னையில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

DIN

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த கமலா நரசிம்மா ராவ் (52) என்பவரை சோதனை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதில், அவா் தனது உடலுறுப்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோல், மலேசியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் பயணித்த யாசா் அராபத் முகமது யூசப் (29) என்பவரின் உடைமைகளைச் சோதித்தபோது, ரேடியோ மற்றும் உடைகளில் மறைத்து வைத்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 235 கிராம் தங்கம் கடத்தி வருவது தெரியவந்தது.

இவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் இதுதொடா்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT