சென்னை

லாரியில் கஞ்சா கடத்தல்: 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

DIN

சென்னை வழியாக லாரி மூலம் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைப்பொருள்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அசாமில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு சென்னை வழியாக லாரிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சென்னையை அடுத்துள்ள நாசரேத்பேட்டை சோதனைச்சாவடி அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வக்குமாா், மதி, ரமேஷ் மற்றும் விழுப்புரம் மாவடத்தைச் சோ்ந்த ராஜா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நடந்து வந்தது. போலீஸாா் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் செந்தில்மூா்த்தி ஆஜராகி வாதிட்டாா். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி புதன்கிழமையன்று பிறப்பித்த தீா்ப்பில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட செல்வக்குமாா் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT