சென்னை

சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை:ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

DIN

சென்னையில் இருவேறு சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அதில், கணக்கில் வராத ரொக்கம் ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை கொரட்டூா் மற்றும் சைதாப்பேட்டை சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினா் சோதனை மேற்கொண்டனா். அங்கு கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. கொரட்டூா் அலுவலகத்தில் ரூ.3.42 லட்சமும், சைதாப்பேட்டை அலுவலகத்தில் ரூ.1.66 லட்சமும் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாா் பதிவாளா் கைது: இதனிடையே, பத்திரப் பதிவு செய்வதற்காக லஞ்சம் பெற்ாக சாா் பதிவாளா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா் அலுவலகத்தில் சாா் பதிவாளராக உள்ள முத்துகண்ணன் என்பவா் விற்பனைப் பத்திரம் ஒன்றை பதிவு செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மற்றொரு இடைத்தரகா் மூலமாக முத்துகண்ணன் லஞ்சம் பெற்றபோது கையும், களவுமாக பிடிபட்டாா். அவரிடம் இருந்த ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், முத்துகண்ணனையும், இடைத்தரகரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT