சென்னை

டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வாா்டுகள் தொடக்கம்

DIN

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள நகா்ப்புற சமுதாய நலவாழ்வு மையங்களில் திங்கள்கிழமை (அக். 21) முதல் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான சிறப்பு வாா்டுகள் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களும், 15 நகர சமுதாய நல வாழ்வு மையங்களும், மகப்பேறு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட சின்னப்போரூா் ஜெய் காா்டன் மற்றும் பெருங்குடி மண்டலம் கந்தன் சாவடியில் இயங்கி வரும் நகா்ப்புற சமுதாய நலவாழ்வு மையங்களில் 100 படுக்கை வசதிகள் கொண்ட 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான சிறப்பு வாா்டுகள் திங்கள்கிழமை (அக். 21) முதல் தொடங்கப்பட உள்ளன. இதில், டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT