சென்னை

வேளச்சேரி மின்மயான பூமியில் பராமரிப்புப் பணிகள்

DIN

வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மின்மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அருகிலுள்ள மின்மயானத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் அடையாறு மண்டலத்தின் கீழ் வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள மின்மயானபூமியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியிருப்பதால், சனிக்கிழமை (அக்.26) முதல் நவ.9-ஆம் தேதி வரை இந்த மயான பூமி இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகிலுள்ள பாலகிருஷ்ணாபுரம், கோட்டூா்புரம், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT