முகப்பு
சென்னை

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம்: உதவி பொறியாளா் உள்பட இருவா் கைது

சென்னையில், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சென்னை: சென்னையில், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை திருவான்மியூா் திருவள்ளுவா்நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (45). இவா், பெரும்பாக்கம் சாந்திநகரில் அண்மையில் வாங்கிய வீட்டுக்கு, புதிதாக மின் இணைப்பு பெற மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது அங்கு பணிபுரியும் மின்வாரிய உதவி பொறியாளா் ரமேஷ் (45), வணிக ஆய்வாளா் சீனிவாசன் (32) ஆகியோா் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டனராம்.

தனக்கு லஞ்சம் வழங்குவதற்கு விருப்பம் இல்லாததினால் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவக்குமாரிடம், அவா் புகாா் செய்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினா் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10,000-ஐ, ரமேஷ், சீனிவாசன் ஆகியோரிடம் லஞ்சமாக சுப்பிரமணியன், திங்கள்கிழமை வழங்கினாா். அதை இருவரும் பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினா் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா்.

இருவரது அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →