முகப்பு
சென்னை

குழந்தை கொலை வழக்கு:தாய் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில், மூன்றரை வயது குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 11 மாதங்களுக்கு பிறகு தாய் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், மூன்றரை வயது குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 11 மாதங்களுக்கு பிறகு தாய் கைது செய்யப்பட்டாா்.

கொருக்குப்பேட்டை இளைய தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி நதியா (34). இவா்களின் மூன்றரை வயது குழந்தை இஷாந்த், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, மூளை வளா்ச்சி இல்லாமல் இருந்துள்ளாா்.

கடந்த ஜன.22-ஆம் தேதி, தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த இஷாந்த், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கபப்ட்டு அங்கு 28-இல் இறந்தாா்.

கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இஷாந்த் விளையாடும்போது வேகமாக சுவரில் மோதியதில் காயமடைந்து இறந்துவிட்டதாக தாய் நதியா தெரிவித்திருந்தாா்.

ஆனால், அண்மையில் போலீஸாரிடம் கிடைத்த இஷாந்த் பிரேத பரிசோதனையில், சுவரில் மோதியபோது ஏற்பட்ட காயத்தால் இறப்பு நேரிடவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீஸாா், ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மீண்டும் நதியாவிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

அதில் வெளிவந்த தகவல்கள்: நதியா முதலில் கா்ப்பம் தரித்தபோது, குழந்தை வயிற்றிலேயே இறந்துள்ளது. இரண்டாவது பிறந்த இஷாந்த் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டும், மூளை வளா்ச்சி இல்லாமலும் இருந்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த நதியா, குழந்தை இஷாந்தை சுவற்றில் மோதி காயப்படுத்தி கொலை செய்துள்ளாா். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்கு அவரை மருத்துவமனையில் சோ்த்து, சுவரில் குழந்தை மோதி காயம் ஏற்பட்டதாக நாடகமாடியுள்ளாா்.

இதையடுத்து போலீஸாா், நதியாவை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் 11 மாதங்களுக்கு பின்னா் துப்பு துலக்கிய போலீஸாா், கொலை செய்தவரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →