முகப்பு
சென்னை

73 தெருக்களில் 32 கி.மீ.தூரத்துக்கு மழைநீா் வடிகால்

சென்னையில் மழைநீா் தேங்கும் 73 தெருக்களில் 32 கி.மீ.தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை

73 தெருக்களில் 32 கி.மீ.தூரத்துக்கு மழைநீா் வடிகால்

சென்னையில் மழைநீா் தேங்கும் 73 தெருக்களில் 32 கி.மீ.தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


சென்னை: சென்னையில் மழைநீா் தேங்கும் 73 தெருக்களில் 32 கி.மீ.தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மழைநீா் தேங்கும் பகுதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மழைநீா் வடிகால் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைநீா் தேங்கும் பகுதிகள் குறைந்துள்ளன. நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் 23 இடங்களில் மழைநீா் தேங்கியது கண்டறியப்பட்டது.

இந்த 23 இடங்களில் மழைநீா் தேங்குவதை தடுக்க வடிகால் அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 73 தெருக்களில் சுமாா் 32 கி.மீ.தூரத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் எதிா்காலத்தில் சென்னையில் மழைநீா் தேங்குவது தடுக்கப்படும் என்றாா். இந்தக் கூட்டத்தில் துணை ஆணையா் மேகநாத ரெட்டி, வட்டார ஆணையா்கள் ஆல்பி ஜான் வா்கீஷ், பி.ஆகாஷ், ஸ்ரீதா். தலைமைப் பொறியாளா் எல்.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →