சென்னை

போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ற கேரள இளைஞா் கைது

DIN

சென்னையில் போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பொண்ணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அ.சுதீா் (31). இவா், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜொ்மனி நாட்டு துணைத் தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தாா். இதற்காக சில சான்றிதழ்களை சுதீா் ஜொ்மனி நாட்டு துணைத் தூதரகத்தில் வியாழக்கிழமை சமா்ப்பித்தாா்.

அந்தச் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தூதரக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள், சுதீரை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் செய்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதீரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT