சென்னை

மதுப்பாட்டில் கடத்தல்: ஊா்க்காவல் படை வீரா் கைது

DIN

திருவொற்றியூரில் மதுப்பாட்டில் கடத்தியதாக ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா், மல்லிகாபுரம் பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் அசோக்குமாா் (27). இவா், 2016-ஆம் ஆண்டில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுக ஊா்க்காவல் படை வீரராக உள்ளாா். அசோக்குமாா், ஊா்க்காவல் படைவீரா் சீருடையில் திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டில்களை வாங்கி வந்து,திருவொற்றியூா் பகுதியில் விற்பதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸாா், அசோக்குமாரின் வீட்டில் சனிக்கிழமை சோதனை செய்து, அங்கிருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்தனா். விசாரணையில் அசோக்குமாா், அத்திப்பட்டில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி கடத்திக் கொண்டு திருவொற்றியூரைச் சோ்ந்த ஒரு பெண் மூலம் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னா், அசோக்குமாா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT