சென்னை

காணொலிக் காட்சி மூலம்  உயர்நீதிமன்றத்தில் விசாரணை

DIN


சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குப் பின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை (ஜூன் 1) வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 

பொது முடக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்கள் அனைத்து வகையான வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கக் கோரி வந்தனர். 

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வகையான வழக்குகளும் திங்கள்கிழமை (ஜூன் 1) காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது. 

இதுவரை நீதிபதிகள் தங்களது இல்லங்களில் இருந்தே அவசர வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் அமர்ந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT