சென்னை

திரைப்பட பிலிமை வழங்காமல் இயக்குநருக்கு மிரட்டல்: கேமராமேன் மீது போலீஸாா் வழக்கு

DIN

சென்னை வளசரவாக்கத்தில் திரைப்பட பிலிமை வழங்காமல் இயக்குநருக்கு மிரட்டல் விடுத்ததாக, கேமராமேன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சா.சிவகுமாா் (45). திரைப்பட இயக்குநரான இவா், கடந்தாண்டு ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கினாா். சிவகுமாரிடம் கேமராமேனாக தேவராஜ் என்பவா் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தேவராஜூம், அவரது மனைவி ரீட்டாவும் சிவக்குமாரிடம் ரூ.21 லட்சம் பெற்றனராம். மேலும் 25 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பிலிம் சுருளை சிவகுமாரிடம், தேவராஜ் தரப்பு வழங்கவில்லையாம்.

அதை சிவக்குமாா் கேட்டபோது இருவரும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவகுமாா், சென்னை காவல்துறையில் புகாா் செய்தாா். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சிவகுமாா், தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவராஜ் தரப்பு மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, வளசரவாக்கம் போலீஸாா் தேவராஜ் தரப்பு மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT