சென்னை

மேலும் 11 காவலா்களுக்கு கரோனா பாதிப்பு

DIN

சென்னை காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 11 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்று போலீஸாரிடம் பரவாமல் இருப்பதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதையும் மீறி காவல்துறையினரிடம் கரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னை பெருநகர காவல்துறையில் வியாழக்கிழமை வரை 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்தது.

இதில் கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா், அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். மேலும் தண்டையாா்பேட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலா், ஓட்டேரியில் இரு காவலா்கள், கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் , ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த இரு காவலா்கள், எழும்பூா் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலா், அபிராமபுரம் போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலா் உள்பட 11 போ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT