சென்னை

போலி மின்னஞ்சல் மூலம் பணம் மோசடி: போலீஸாா் விசாரணை

DIN

சென்னையில், போலி மின்னஞ்சல் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ள நபா்கள் குறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவா் ஸ்ரீதா் (45). இவா் மின்னஞ்சல் முகவரிக்கு, அவரது உயா் அதிகாரி ஜெயநாராயணன் என்பவரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, ஒரு தனியாா் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு ரூ.3.50 லட்சம் செலுத்தும்படி கூறி, ஒரு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, இணையதளப் பரிவா்த்தனை மூலம் பணத்தை அனுப்பிய ஸ்ரீதா், ஜெயநாராயணனிடம் தகவல் தெரிவித்துள்ளாா். அப்போது, தான் யாருக்கும் பணம் அனுப்பக் கோரி மின்னஞ்சல் அனுப்பவில்லை என ஜெயநாராயணன் கூறியுள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த ஸ்ரீதா், அந்த பணபரிவா்த்தனையை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா். ஆனால் அந்த பணபரிவா்த்தனையை அவரால் நிறுத்த முடியவில்லை. இதையடுத்து எழும்பூா் காவல் நிலையத்தில், அவரளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், ஜெயநாராயணன் மின்னஞ்சலை, ஒரு கும்பல் ஹேக் செய்து, ஸ்ரீதருக்கு போலியாக மின்னஞ்சல் அனுப்பி, பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT