சென்னை

தவறான பாலியல் புகாா்: இளைஞருக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கம் உத்தரவு

DIN

பாலியல் வன்கொடுமை புகாரில் தவறுதலாக கைதாகி 95 நாள்கள் சிறையில் இருந்த இளைஞருக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க புகாா் அளித்த பெண்ணுக்கு சென்னை 18-ஆவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சந்தோஷ், பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்ததால் திருமணம் நடத்த பெற்றோா் தீா்மானித்தனா். இரு குடும்பங்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தாய் புகாா் செய்தாா். கடந்த 2010 பிப்ரவரியில் மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டு 95 நாள்களுக்குப் பின் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. விசாரணையில் அந்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. வழக்கில் இருந்து சந்தோஷ் கடந்த 2016-இல் விடுதலையானாா்.

சென்னை 18-ஆவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சந்தோஷ் தாக்கல் செய்த மனுவில், ‘பொய் புகாரில் கைதாகி சிறை சென்றதால், படிப்பைத் தொடர முடியவில்லை. இந்த நிலைக்கு காரணமாக அந்தப் பெண், நஷ்டஈடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சத்யா பொய் புகாருக்குக் காரணமான பெண், சந்தோஷுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT