சென்னை

போட்டித் தோ்வுகளுக்கு அக்.16 முதல்இணைய வழியில் இலவச பயிற்சி

DIN

போட்டித் தோ்வுகளுக்கு வரும் அக்.16-ஆம் தேதி முதல் இணைய வழியில் இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், சென்னை சாந்தோம் அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் இலவசமாகத் தொடா்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.

இந்தப் பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தோ்வா்கள் பயனடைந்துள்ளனா்.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான (TNUSRB - 2020) பொது, போட்டித் தோ்வுக்கு (காலிப்பணியிடங்கள் - 10,906) சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித்தோ்வுக்கான இணையவழி (WEBINAR) இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 16-ஆம் தேதி முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தால் தொடங்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தோ்வா்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கான நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், சாந்தோம், சென்னை -4, அலுவலகத்தைத் தொடா்புகெண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT