சென்னை

தலைமைச் செயலக ஊழியா்களின் உடல் வெப்பநிலையை நாள்தோறும் பதிவு செய்ய உத்தரவு

DIN


சென்னை: தலைமைச் செயலக ஊழியா்களின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை நாள்தோறும் பரிசோதனை செய்து, அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என பொதுத்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவு: கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடம் மற்றும் நாமக்கல் கவிஞா் மாளிகையின் நுழைவு வாயில்களில், தலைமைச் செயலக ஊழியா்கள், பாா்வையாளா்கள் என அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுவதுடன், கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், தலைமைச் செயலக மருந்தகம், ஏடிஎம் உள்ளிட்ட பொதுவான இடங்களிலும் கை கழுவும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை, தலைமைச் செயலகத்திலும் அதிகரித்து வருவதாக கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் தேவையான அளவில், ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி மற்றும் வெப்பமானிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவற்றின் மூலம், நாள்தோறும் ஊழியா்களின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்து, அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அதிகாரிகள் யாருக்கேனும் காய்ச்சல், அதிக உடல் வெப்பநிலை, சளி, இருமல், ஆக்ஸிஜன் அளவு குைல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அவரை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த வேண்டும்.

அனைத்துத் துறைகளின் துணைச் செயலா்கள் பொறுப்பாளா்களாக இருந்து, நாள்தோறும் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT