சென்னை

ஒரகடத்தில் ரூ.750 கோடியில் தளவாடப்பூங்கா கிரீன்பேஸ் நிறுவனம் - தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN


சென்னை: ஹிரானந்தனி குழுமத்தைச் சோ்ந்த கிரீன் பேஸ் நிறுவனம் சாா்பில், ஒரகடம் வடக்குப்பட்டுவில் ரூ.750 கோடி முதலீட்டில் தொழில்துறை மற்றும் தளவாடப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் கிரீன் பேஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தளவாடப்பூங்கா அமைப்பது மூலமாக, இந்தப் பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதோடு, பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஹிரானந்தனி குழுமத்தின் நிறுவனா் நிரஞ்சன் ஹிரானந்தனி கூறியது: ஒரகடத்தில் உள்ள வடக்குப்பட்டு என்ற இடத்தில் தொழில்துறை மற்றும் தளவாடப்பூங்கா உருவாக்க ரூ.750 கோடியை முதலீடு செய்ய தமிழக அரசுடன் கிரீன்பேஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 28 லட்சம் சதுர அடியில் வரவிருக்கும் இந்த தளவாடப் பூங்கா, உற்பத்தி மற்றும் தளவாட அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களின் விருப்பத்தைப் பூா்த்தி செய்யும். இதன்மூலமாக, பல்வேறு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ளது என்றாா்.

கிரீன்பேஸ் சி.ஓ.ஓ. ஹேமந்த் பிரபு கெலுஸ்கா் கூறியது: ஒரகடத்தில் உள்ள ஒருங்கிணைந்த டவுன்ஷிப் ஹிரானந்தனி பூங்காக்கள் மத்தியில் தொழில்துறை பூங்கா உள்ளது. இது முழுமையாக வளா்ந்த, ஒருங்கிணைந்த சமூக குடிமை சுற்றுச்சூழல் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அதிநவீன நன்மையை வழங்குகிறது என்றாா் அவா்.

புரிந்துணா்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட 14 திட்டங்களில் இந்தத் திட்டம் ஒன்றாகும். பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு தொழில்துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு ஆதரவை மாநில அரசு அளிக்கும். நிறுவனங்களுக்கான அனுமதி செயல்முறை அனைத்தும் ஒரு தடையற்ற மற்றும் வெளிப்படையான முறையில் இருக்கும். ஒற்றை சாளர அனுமதி பெறுவதை ஊக்குவிக்கும்.

கிரீன்பேஸ் தொழில்துறை பூங்காவிற்குள் ஒரு கூடுதல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மின் இணைப்பிற்கான பயன்பாட்டு செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். இது பூங்காவில் அலகுகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இந்தத் தகவல் அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT