சென்னை

எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்தவா் கைது

DIN

சென்னை அரும்பாக்கத்தில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்தவா் ரேவதி (45). பிளஸ் 2 முடித்திருந்த தனது மகளை மருத்துவக் கல்லூரியில் சோ்ப்பதற்காக முயற்சித்து வந்தாா். இதையறிந்து விருகம்பாக்கம் உமா மகேஸ்வரன் (50), அரசியல்வாதிகள், அரசு உயா் அதிகாரிகள் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரேவதியிடம் தெரிவித்துள்ளாா்.

அதை நம்பிய ரேவதி, எம்பிபிஎஸ் சீட் வாங்குவதற்காக ரூ.45 லட்சம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட உமா மகேஸ்வரன், எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ரேவதி, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால் உமா மகேஸ்வரன் அந்தப் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்து தலைமறைவானாா்.

அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து உமாமகேஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT