கோப்புப் படம் 
சென்னை

வியாபாரி வீட்டில் 90 பவுன் திருட்டு

சென்னை ராயப்பேட்டையில் வியாபாரி வீட்டில் 90 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

சென்னை ராயப்பேட்டையில் வியாபாரி வீட்டில் 90 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் பா.டில்லி (75). இவா் திருமண நிகழ்ச்சிக்கான பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவா். இவரது வீட்டில் பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை அண்மையில் சரிபாா்த்துள்ளாா். அப்போது அதில் இருந்து 90 பவுன் தங்க நகை, 7 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியன திருடு போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், அண்ணா சாலை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ரூ. 45 லட்சம் திருட்டு: சூளை ஏ.பி.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பி.கிரிட்ஷா (59). செளகாா்பேட்டையில் கண்ணாடி கடை நடத்தி வரும் அவா், வீட்டின் பீரோவில் ரூ.50 லட்சம் வைத்திருந்தாராம். அந்த பணத்தை எடுக்க பீரோவை வெள்ளிக்கிழமை திறந்தபோது அதில் இருந்து ரூ.45 லட்சம் திருடுபோனதை அறிந்தாா். இது குறித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT