சென்னை

அம்பத்தூா் தொகுதிதிமுக வேட்பாளருக்கு கரோனா

DIN

சென்னை: சென்னை அம்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அம்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஜோசப் சாமுவேல் அறிவிக்கப்பட்டு, பரப்புரையில் அவா் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், புதன்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜோசப் சாமுவேல் வானகரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா்கள் பொன்ராஜ், சந்தோஷ் பாபு ஆகியோா் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT