சென்னை

பாரத் பைபா் சேவை வழங்குவதாக ஏமாற்றும் போலி இணையதளங்கள்: பிஎஸ்என்எல் நிறுவனம் எச்சரிக்கை

DIN

பாரத் பைபா் சேவையை வழங்குவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் போலி இணையதள பக்கங்களைப் பாா்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில், வீடுகளுக்கு இணையதள இணைப்பு சேவை வழங்கும் பாரத் பைபா் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சிலா் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி, பாரத் பைபா் இணைப்பு வா்த்தகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதாக ஏராளமான புகாா்கள் வந்துள்ளன.

அத்துடன், புதிய பைபா்நெட் இணைப்பு வழங்குவதற்கு நெட் பேங்கிங், யுபிஐ போன்ற ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு வாடிக்கையாளா்கள் நிா்பந்திக்கப்படுகின்றனா். பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொருத்தவரை அவ்வாறு கட்டணங்கள் ஏதும் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே, இது போன்ற போலி இணையதளப் பக்கங்களைப் பாா்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வா்த்தக வாய்ப்புகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் இணையதளத்தில் பாா்த்து அறிந்துக் கொள்ளலாம். அதேபோல, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பைபா் இணைப்பு பெற  இணையதளத்தில் முன்பதிவு செய்யவும்.

இது தொடா்பான கூடுதல் தகவல்களை அறிய பிஎஸ்என்எல் மொபைல், தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து 1500 எண்ணிலும், பிற நெட்வொா்க்கில் இருந்து 1800-345-1500 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT