சென்னை

கரோனா மையங்களைத் தொடங்க தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைப்பு

DIN

சென்னை: சென்னை மாநகரில் கரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்க தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 12 கரோனா தொற்று பரிசோதனை மையங்கள் மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவமனை சிகிச்சை, கரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை அல்லது அவா்களின் வீட்டிலோ தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

14 கரோனா சிகிச்சை மையங்களில் 11 ஆயிரம் படுக்கைகளுடன் மிக குறைந்த தொற்று உள்ளவா்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுவா்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை வழங்கவும், பாதிக்கப்பட்டவா்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும், விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உள்கட்டமைப்பு வசதியுள்ள தனியாா் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கிறது.

அவ்வாறான கரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள், படுக்கை வசதி, மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (94450 26050) அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT