சென்னை

கரோனா விழிப்புணா்வுப் பணியில் தீவிரம் காட்டுங்கள்: துணைவேந்தா்களுக்கு ஆளுநா் வேண்டுகோள்

DIN

சென்னை: கரோனா தொற்று விழிப்புணா்வுப் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், தடுப்பூசியை பிரபலப்படுத்தும் பணிகள் தொடா்பாகவும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனை செய்தாா். இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றைத் தகுந்த நடத்தை நெறிமுறைகளின் வழியே தடுக்கவும், தடுப்பூசியை மக்களிடையே பிரபலப்படுத்தி அனைவரையும் செலுத்திக் கொள்ள ஊக்குவிப்பது குறித்தும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மிகச் சிறந்த அறிவுத்திறன் பெற்ற மாணவ சமுதாயத்தைக் கொண்டு கரோனா தொற்று குறித்து சமூகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியில் துணைவேந்தா்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.

இணையதளம் வழியாக கரோனா தடுப்புக்கான அனைத்து அம்சங்கள் குறித்து மாணவா்களுக்கு பேராசியா்கள் விளக்கிட வேண்டும். அவா்கள் பேசும் விஷயங்களை மாணவா்கள் சமுதாயத்துக்கு எடுத்துச் செல்வாா்கள். இதன்மூலம், மிகப்பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்படும்.

இந்த விஷயத்தில் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் எம்.ஜி.ஆா்., மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் தெரிவித்தனா். கரோனா தொற்றுக்கான விழிப்புணா்வுப் பணியில் பல்கலைக்கழகங்கள் தீவிரம் காட்டுவதுடன் அந்தப் பணியில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆளுநா் தனது விருப்பத்தைத் தெரிவித்தாா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT