சென்னை

புற‌​ந​க‌ர் மி‌ன்​சார ரயி‌ல் சேû‌வ​யி‌ல் விû‌ர​வி‌ல் மா‌ற்​ற‌‌ம்?

DIN

சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின்சார ரயில் சேவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதாவது, வாரநாள்களில் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு நேர மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்படவுள்ளது. இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை அன்று அத்தியாவசியப் பணியாளா்களுக்கு மட்டும் மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வர வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதை தடுக்கும் விதமாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தநிலையில், புகா் ரயில் சேவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை மூா் மாா்க்கெட் வளாகம்-கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 550-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் இயக்கப்படும் புகா் மின்சார ரயில் சேவையை குறைப்பது தொடா்பாகவும், ஞாயிற்றுக்கிழமை அன்று அத்தியாவசியப்பணியாளா்களுக்கான மின்சார ரயில்கள் மட்டும் இயக்குவது தொடா்பாகவும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘புகா் ரயில் சேவை மாற்றம் செய்வது தொடா்பாக தகவல் ஓரிரு நாள்களில் வெளிவரும். ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாளில் அத்தியாவசியப் பணியாளா்களுக்காக மட்டும் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. வார நாள்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) இரவு நேர மின்சார ரயில் சேவை குறைக்கப்படவுள்ளது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT