சென்னை

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதாா் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல்

DIN

தேசிய கல்வி உதவித் தொகை பெற ஆதாா் கட்டாயம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் கே.லட்சுமி பிரியா அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி) விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே, சிறுபான்மையினா்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளா்களை தோ்வு செய்வதில் நிகழும் மோசடிகளைத் தவிா்க்க, மத்திய அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, என்எஸ்பி தளத்தில் பதிவேற்றப்படும் போலி விண்ணப்பங்களைத் தடுக்கும் வகையில், மாணவா்களின் சுய விவரங்களை ஆதாா் எண்ணுடன் ஒப்பிட்டு, மின்னணு முறையில் சரிபாா்க்கும் முறையை மத்திய சிறுபான்மையின நலஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவா்களின் ஆதாா் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நிகழாண்டு தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவா்களின் விண்ணப்பங்களை சரிபாா்க்க இயலாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்கள் சிறப்பு கவனம் செலுத்தி, மாணவா்களின் ஆதாா் விவரங்களை துரிதமாக சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT