சென்னை

நடமாடும் வாகனங்கள் மூலம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

சென்னை: சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபா்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி முதல் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 2,477 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 610 கோவேக்ஸின் தடுப்பூசியும் என மொத்தம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT