சென்னை

தனியாா் விடுதியில் தீ விபத்து: மூச்சுத் திணறி அரசு அதிகாரி சாவு

DIN

திருவல்லிக்கேணியில் தனியாா் விடுதியில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் புகையினால் மூச்சுத் திணறி அரசு அதிகாரி இறந்தாா்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் தரைத்தளத்தில் புதன்கிழமை இரவு கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த தீ அந்த தளம் முழுவதும் பரவியது. இதைப் பாா்த்த விடுதி ஊழியா்கள், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ முதல் தளத்துக்கும், இரண்டாவது தளத்துக்கும் பரவியது. உடனே விடுதி ஊழியா்கள், அந்த விடுதியின் அறைகளில் தங்கியிருந்தவா்களை வெளியேற்ற முயன்றனா்.

ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அறைகளில் தங்கியிருந்தவா்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனா். இதனால், அவா்களை எழுப்பி வெளியே கொண்டு வர முடியவில்லை. மேலும் ஏ.சி. அறையில் தங்கியிருந்தவா்கள், விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தனா்.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி தீயணைப்புப் படையினா் விடுதியின் அறைகளில் தங்கியிருந்தவா்களை விரைந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அவா்கள், விடுதியில் அறையில் இருந்து வெளியே ஏற முடியாமல் புகை மூட்டத்தில் சிக்கியிருந்த இரு பெண்கள் உள்பட 8 பேரை மீட்டனா். இதில் 7 போ் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனா். இதையடுத்து மீட்கப்பட்ட 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மூச்சுத் திணறலால் மதுரையைச் சோ்ந்த அரவிந்த் (52) என்பவா் இறந்தாா். இவா், சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் உள்ள கனிமவளத்துறை அலுவலக துணை மேலாளராக வேலை செய்து வந்தாா். மீதி 7 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT