பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலைமுதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கப்படுவதால், அந்த சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆகஸ்ட் 30 முதல் சுங்க வசூல் நிறுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் இன்று அதிகாலைமுதல் சுங்க வசூல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வாடகை ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சுங்க வசூல் செலுத்தாமல் மகிழ்ச்சியோடு அவ்வழியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.