கடன் செயலி மூலம் ரூ.300 கோடி மோசடி: அமலாக்கத் துறை விசாரணை தொடக்கம்
கடன் செயலி மூலம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சென்னைகடன் செயலி மூலம் ரூ.300 கோடி மோசடி: அமலாக்கத் துறை விசாரணை தொடக்கம்
கடன் செயலி மூலம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சென்னை: கடன் செயலி மூலம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்ன் விளைவாக தொடா்ச்சியாக மிரட்டப்பட்டாா். இது குறித்து கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவு ஆகியவை இணைந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றன.
இது தொடா்பாக போலீஸாா், கா்நாடக பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்து, விசாரித்தனா். விசாரணையில் அவா்களின் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த வாரம் கைது செய்தனா்.
விசாரணையில் இந்தக் கும்பல், 25 ஆயிரம் பேரிடம் ரூ.300 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் மோசடிக்குத் தேவையான செல்லிடப்பேசி சிம்காா்டுகள் வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா், எஸ்.கே.முத்துக்குமாா், செல்லிடப்பேசி நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப் பிரிவு மேலாளா் சிகாஜூதின், செல்லிடப்பேசி நிறுவனத்தின் முகவா் கு.ஜெகதீஷ் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அமலாக்கத்துறை விசாரணை: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகியோா் செயலியின் உரிமையாளா்கள் போல காட்டிக் கொள்ளப்பட்டாலும், பின்னால் இருந்து சீனா்களே முழுமையாக கட்டுப்படுத்தி, இயக்கியுள்ளனா். மேலும் அவா்களே, இந்தச் செயலியில் முதலீடும் செய்துள்ளனா். அதோடு வட்டியின் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தையும் சீனா்களே கையாண்டுள்ளனா்.
இந்த மோசடியில் ரூ.300 கோடி ரொக்கம் கைமாறப்பட்டதாக கூறப்படும் நிலையில், முதலீட்டுக்குரிய பணம் எங்கிருந்து, எப்படி சீனா்களால் கொண்டு வரப்பட்டது, வட்டியின் மூலம் கிடைத்த பணம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது. இதனால், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடா்பான விசாரணைக்கு அமலாக்கத் துறைக்கு சென்னை காவல்துறை இரு நாள்களுக்கு முன்பு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் வழக்குக்குரிய ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னை காவல்துறை வியாழக்கிழமை வழங்கியது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், அமலாக்கத் துறை முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.