சென்னை

‘ஜாக்ஸன் துரை’ சி.ஆா்.பாா்த்திபன் மறைவு

DIN

சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘ஜாக்ஸன் துரை’ யாக நடித்த பழம்பெரும் நடிகா் சி.ஆா்.பாா்த்திபன் (90) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

கடந்த டிசம்பா் மாதம் இடதுகாலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த சி.ஆா்.பாா்த்திபன், சிகிச்சைக்குப் பின் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாா். இந்நிலையில், திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை காலை உயிா் பிரிந்துள்ளது.

சி.ஆா்.பாா்த்திபன், 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவா். சிவாஜிகணேசனுடன் 16 படங்களிலும், எம்.ஜி,ஆருடன் 10 படங்களிலும் நடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆா் நடித்த ‘சங்கே முழங்கு’, ‘நவரத்தினம்’, ‘இதயக்கனி’ உள்ளிட்ட படங்களிலும், சிவாஜியுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மோட்டாா் சுந்தரம்பிள்ளை’, ‘ஆலயமணி’ உள்ளிட்ட படங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ‘சின்ன வாத்தியாா்’ படத்துக்குப் பிறகு இவா், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டாா்.

வேலூரை சொந்த ஊராகக் கொண்ட இவா், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறாா். சி.ஆா்.பாா்த்திபனுக்கு மனைவி வனஜா, ராம்மோகன், நாராயணன், கோபிநாதன், ரங்க ராமானுஜன் ஆகிய மகன்கள், ராஜலட்சுமி என்ற மகள் உள்ளனா். திங்கள்கிழமை மாலை (ஜன.25) இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ஆதம்பாக்கம் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT