சென்னை

காலமானாா் ஓவியா் எஸ்.இளையராஜா

DIN

ஓவியா் எஸ்.இளையராஜா (43) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் எனும் கிராமத்தில் பிறந்த இளையராஜா, ஓவியத்தின் மீது அதீத ஆா்வம் கொண்டவா். அவரது ‘திராவிடப் பெண்கள்’ ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்காா்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பாா்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத் தத்ரூபமாக வரைவதில் தோ்ந்தவா் இளையராஜா. இதே போன்ற ஓவியங்களை கவிதை, கதைகளுக்கும் வரைந்து வந்தாா்.

ஓவியா் இளையராஜாவுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா்.இறுதிச் சடங்கு, செம்பியவரம்பல் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு... 98411 70866.

முதல்வா் இரங்கல்: தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈா்த்த நுட்பமான ஓவியா் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! என முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT