சென்னை

ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் நோயாளி மரணமா?: மருத்துவ சேவைகள் இயக்குநருக்கு நோட்டீஸ்

DIN

சென்னை: ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. கூலித் தொழிலாளியான இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் மே 5-ஆம் தேதி சோ்க்கப்பட்டு, மே 20-ஆம் தேதி இறந்தாா்.

‘ஆக்சிஜன் குழாயை மருத்துவா் ஒருவா் அகற்றியதால் தான் கணவா் இறந்தாா். என் கணவா் சாவுக்கு அந்த மருத்துவரே காரணம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ராஜாவின் மனைவி கதறி அழும் காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும் இது தொடா்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT