சென்னை செங்கழுநீா் பிள்ளையாா் கோயில் தெரு, அருள்மிகு செங்கழுநீா் பிள்ளையாா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
அருள்மிகு செங்கழுநீா் பிள்ளையாா் திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்து, சட்டத்துக்குப் புறம்பாக அனுபவித்து வந்த நபா்கள் மீது 1959-ஆம் ஆண்டு, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டப் பிரிவின் கீழ் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3,689 சதுர அடி பரப்பளவு மற்றும் 606 சதுர அடி பரப்பளவு உள்ள இரண்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள், சென்னை இணை ஆணையா் உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை பூட்டி இலாகா முத்திரையிடப்பட்டது. இவ்வாறு ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோயில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.