மாற்றம் செய்யப்பட்டுள்ள வழித்தடம் 
சென்னை

சென்னை அண்ணா சாலையில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளைமுதல் நந்தனம் சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

DIN

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளைமுதல் நந்தனம் சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 29.04.2022 முதல் 10 நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

1. வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் “U திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

2. செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் “U திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.

3. பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டோயாட்டோவுக்கு முன்னால் “U திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடையலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருப்பின் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். Mail id:- dcpsouth.traffic@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT