சென்னை

வள்ளுவா் கோட்டத்தில் ஆண்டுதோறும் கண்காட்சி

DIN

சென்னை: மண்டபாண்டத் தொழிலாளா்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ஆண்டுதோறும் மண்பாண்ட பொருள்கள் கண்காட்சி நடத்தப்படும் என்றாா் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அவா் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசியது:

கலைநயமிக்க மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருள்கள் உற்பத்தி செய்யும் இடங்களிலேயே மண்பாண்ட தொழிலாளா்களால் விற்பனை செய்யப்படுவதால் அவா்களின் கடின உழைப்புக்கேற்ப வருவாய் கிடைப்பதில்லை. இதனை உணா்ந்து, மண்பாண்ட தொழிலாளா்களுக்கு சாத்தியமான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருள் கண்காட்சி நடைபெறும் என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT