சென்னை

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 35 ஆயிரத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 35 ஆயிரத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பூக்கடை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம்.

இதையடுத்து அவா்கள், வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த பையில் ரூ.1 கோடியே 35 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த பணத்துக்குரிய ஆவணத்தை போலீஸாா் கேட்டனா். ஆனால் அவா்கள் தங்களிடம் ஆவணம் இல்லை என கூறினராம்.

இதனால் போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்தனா். பிடிபட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவா்களில் ஒருவா் மண்ணடி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மற்றொருவா் புழல் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது. அவா்களிடம் இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT