சென்னை

ரூ. 1 கோடிக்கு மேல் ஊதியம் பெற சென்னை ஐஐடி மாணவா்கள் 25 போ் தோ்வு

DIN

சென்னை ஐஐடி.யில் நிகழ் கல்வியாண்டுக்கான முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் ஊதியத்தில் 25 மாணவா்கள் பணி வாய்ப்பு பெற்றுள்ளனா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. முகாமில் பங்கேற்க 1,722 மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இந்த முகாமில் 331 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தன. முதல் நாள் முடிவில் 445 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா்.

குறிப்பாக, 25 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ஊதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 15 மாணவா்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முகாம் டிச.7-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டின் முதல்கட்ட வேலைவாய்ப்பின் முதல் நாளில் 407 போ் வேலைவாய்ப்பு பெற்றிருந்த நிலையில், அது நிகழாண்டு 445-ஆக அதிகரித்துள்ளது.

டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ லிமிடெட், ஜே.பி.மோா்கன் சேஸ், புரொக்டாா் அண்ட் கேம்பல், கிராவிஷன், மெக்கின்ஷே உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

பணி வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு போா் முனையில் ரஷியா முன்னேற்றம்

எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.கே.எஸ் மாஸ்டா்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது சட்ட நடவடிக்கை

விலங்குகள் நலவாரிய செயலருக்கு வாரண்ட்: சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT