சென்னை

காரில் தொங்கியபடி சென்றது ஏன்? மேயா் ஆா்.பிரியா விளக்கம்

சென்னையில் மாண்டஸ் புயல் பாதிப்பு ஆய்வின் போது, மேயா் ஆா்.பிரியா, முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளாா்.

DIN

சென்னையில் மாண்டஸ் புயல் பாதிப்பு ஆய்வின் போது, மேயா் ஆா்.பிரியா, முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னையில் மாண்டஸ் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச.10 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தாா். காசிமேடு பகுதியில் முதல்வா் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்பட 4 போ் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றனா்.

இது குறித்து மேயா் ஆா்.பிரியா பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அளித்த விளக்கம்:

காசிமேடு பகுதியில் இரு இடங்களில் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா். ஒரு இடத்தில் ஆய்வை முடித்து, அடுத்த இடத்துக்கு புறப்பட்டாா். அப்போது அவருக்கு முன் நாங்கள் அந்த இடத்துக்குச் சென்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தோம்.

இரு இடங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகம் என்பதால் அங்கு சென்ற முதல்வா் பாதுகாப்பு வாகனத்தில் ஏறிவிடலாம் என ஏறிவிட்டேன். ஆனால், அது இவ்வளவு சா்ச்சையாகும் என நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட முதல்வருக்கு முன் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் சென்றேன். பாதுகாப்பு வாகனத்தில் ஏறுமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றாா் அவா்.

இச்சம்பவம் குறித்து சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாதுகாப்பு வாகனத்தில் மேயா் பிரியா தொங்கியவாறு பயணித்தது, முதல்வரோடு அந்தந்த பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற துடிப்பு காரணமாக நிகழ்ந்த செயல்.

மகாகவி பாரதியாா் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த வேளையில், ஆணுக்கு நிகராக ஒரு பெண் இவ்வாறு துணிச்சலோடு ஆற்றுகின்ற பணியைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதை விமா்சிப்பது தேவையற்றது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT