சென்னை

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: கேரளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிவலோகத்தில் தலா 60 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 50 மி.மீ., சிற்றாறில் 40 மி.மீ., சுருளக்கோட்டில் 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT