சென்னை

42 பேருக்கு ரூ.21.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்

DIN

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ. 21.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தலைமையில் மக்கள் குறைத் தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 136 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.1.99 லட்சம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு

ரூ.65,000 மதிப்புள்ள தையல் இயந்திரங்களும், 30 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள திருமண உதவித் தொகை என ஆக மொத்தம் ரூ.21.69 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் பா.கியூரி,  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஸ்ரீநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT