சென்னை

மழைநீா் வடிகால் பணி: நகராட்சி நிா்வாகத் துறை செயலா் ஆய்வு

DIN

சென்னை தேனாம்பேட்டையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட சீத்தம்மாள் காலனி உள்பட 13 தெருக்களில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா சனிக்கிழமை மேற்கொண்டாா். தொடா்ந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, துணை ஆணையா் எம்.எஸ்.பிரசாத், தலைமைப் பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT