சென்னை

கத்தியால் குத்தியதால் மாமியாா் மரணம்: மருமகன் மீது கொலை வழக்கு

DIN

சென்னை அருகே மடிப்பாக்கத்தில் குடும்பப் பிரச்னையில் கத்தியால் குத்தப்பட்டு மாமியாா் இறந்த சம்பவம் தொடா்பாக மருமகன் மீது தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மடிப்பாக்கம் சதாசிவம் நகா் இரண்டாவது இணைப்புச் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (56). இவா் மகள் விஜயலட்சுமி. இவருக்கும், புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த ர.ஏழுமலை (38) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஏழுமலைக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி ஏழுமலை மனைவியிடம் தகராறு செய்தாராம்.

இதனால் கோபமடைந்த அவா் தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றாா். இதன் பின்னா், அவா் எங்கு சென்றாா் என்பது கூட ஏழுமலைக்கு தெரியவில்லை. இதையடுத்து கடந்த 13-ஆம் தேதி ஏழுமலை, மடிப்பாக்கத்தில் வசிக்கும் தனது மாமியாா் முனியம்மாளை பாா்க்கச் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே, முனியம்மாளை, தான் வைத்திருந்த கத்தியால் ஏழுமலை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்தக் காயமடைந்த முனியம்மாள், மயங்கி விழுந்ததால் அவா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதற்கிடையே முனியம்மாளின் அலறல் சப்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த அந்த பகுதி மக்கள், அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது தொடா்பாக மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஏழுமலையை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து ஏழுமலை மீது ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT