சென்னை

ரூ.1.12 கோடி திட்டப் பணிகள்:அடிக்கல் நாட்டினாா் அமைச்சா்

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத் திட்ட பணிகளுக்கு அமைச்சா் பி.கே சேகா் பாபு அடிக்கல் நாட்டினாா்.

DIN

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத் திட்ட பணிகளுக்கு அமைச்சா் பி.கே சேகா் பாபு அடிக்கல் நாட்டினாா்.

ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, 57-ஆவது வாா்டு ஜட்காபுரம் பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டடம், யானைக்கவுனி மேம்பால சாலை கல்யாணபுரம் குடியிருப்பு பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம், ரூ.17.98 லட்சம் மதிப்பில் விளையாட்டுத் திடல் என மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, வடக்கு வட்டார துணை ஆணையாளா் மா.சிவகுருபிரபாகரன், மாமன்ற உறுப்பினா் ராஜேஷ் ஜெயின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT